திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கோடை விடுமுறையை கணக்கில் வைத்து ரிலீசாகும் படங்கள்... அசத்தல் லிஸ்ட் இதோ.. மக்களே ரெடியா?..!
பள்ளி & கல்லூரிகளுக்கு கோடை காலங்களில் பொதுத்தேர்வுகள் அனைத்தும் நடைபெற்று முடித்து விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கும். இக்காலத்தில் மக்கள் தங்களுக்கு பிடித்த பல்வேறு இடங்களுக்கு குடும்பத்தோடு சென்று வருவார்கள். இதனால் சுற்றுலாத்தலங்கள் பரபரப்புடன் காணப்படும்.
அதே வேளையில், கோடை விடுமுறையை கணக்கில் வைத்துக்கொண்டு உச்ச நட்சத்திரங்கள் முதல் பல படங்கள் அடுத்தடுத்து வெளியீடு செய்யப்படும். கொரோனா & கொரோனாவுக்கு பின்னர் திரையுலகம் லேசான சரிவை சந்தித்தாலும், அவர்கள் விரும்பும் படங்களை தொடர்ந்து பார்த்து உலகளவில் சாதனை படங்களை நம் மக்கள் வழங்கிவிட்டனர்.
அதற்கு சாட்சியாக பீஸ்ட், கே.ஜி.எப் 2, ஆர்.ஆர்.ஆர், பொன்னியின் செல்வன் உட்பட பல படங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், கோடை விடுமுறையை கணக்கில் வைத்துக்கொண்டு ரஜினிகாந்தின் ஜெயிலர், மணி ரத்தினத்தின் பொன்னியின் செல்வன் 2, உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன், வெற்றிமாறனின் விடுதலை உட்பட பல படங்கள் ரிலீசாக உள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளன.