மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜோதிகா படத்தில் இணையும் முக்கிய மூன்று மாபெரும் பிரபலங்கள்! ஆச்சரியத்தில் மூழ்கிய திரையுலகம்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட நிலையில், படத்தில் நடிப்பதற்கு இடைவெளி விட்டிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வுசெய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த காற்றின் மொழி திரைப்படம் ரசிகர்களையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
அதனை ஜோதிகா தற்போது ராஜ் என்ற புதுமுக இயக்குனர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜோதிகா பள்ளி ஆசிரியையாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ஜோதிகா அடுத்து நடிக்கும் படம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்த படத்தில் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன் மூவரும் நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்தை சூர்யாவே தயாரிக்கிறார்.என செய்திகள் வெளிவந்துள்ளது.