மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல ரசிகர்களே ரெடியா.. அஜித் பிறந்தநாளில் டிரிபிள் ட்ரீட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ஆப்ஷன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் அஜித்தின் 53 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த 3 திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதன்படி, வரும் மே ஒன்றாம் தேதி பில்லா, மங்காத்தா மற்றும் காதல் மன்னன் ஆகிய 3 திரைப்படங்கள் திரையரங்களில் வெளியாக உள்ளது. சமீபத்தில் விஜய் நடித்த கில்லி திரைப்படம் திரைப்படங்களில் ரீ ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை வெற்றி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.