ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
வகுப்பறையில் மது அருந்தி அதகளம் செய்த மாணவிகள்! கல்லூரி நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் அங்கு பி.காம் முதலாமாண்டு படித்துவரும் மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து குளிர்பானத்தில் மதுவை கலந்து குடித்துள்ளனர்.
அதனை அருகில் இருந்த மாணவி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வந்தது. இந்நிலையில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரின் கவனத்திற்கு சென்ற நிலையில் அவர்கள் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில் மாணவன் ஒருவன் மதுபானத்தை வாங்கி வந்தததும், மது என தெரிந்தே மாணவிகள் குளிர்பானத்தில் கலந்து அருந்தியததையும் ஒத்துக் கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் கல்லூரி மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் 5 மாணவிகள் இடைநீக்கம் செய்யபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.