மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவமானப்பட்டு நின்ற நெல்சன்... ஆதரவு கரம் நீட்டிய சூப்பர் ஸ்டார்.!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் செப்டம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்காலங்களில் அதிகமான இளம் இயக்குனர்கள் பெரிய நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர். அந்தப் படங்கள் வெற்றியடைவதால் பெரிய நடிகர்களும் இளைய இயக்குனர்களை நாடி செல்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து பா. ரஞ்சித் கபாலி மற்றும் காலா என இரண்டு வெற்றி படங்களை கொடுத்தார். உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் விக்ரம் என்ற மிகப் பிரமாண்டமான வெற்றி படத்தை கொடுத்துள்ளார்.
இந்த சூழலில் சமீபத்தில் திலீப் குமாருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அழைப்பு வந்திருக்கிறது அங்கு அவருக்கு சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. இதனை நெல்சன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் சூப்பர் ஸ்டார் அவரை நேரில் சந்தித்து இருக்கிறார்.
நெல்சனை சந்தித்து சூப்பர் ஸ்டார் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் அவர் பட்ட அவமானங்களை கூறியுள்ளார். சினிமாவில் தொடக்க காலங்களில் இப்படித்தான் இருக்கும் என்றும் அதற்காக மனம் தளர்ந்து விடக்கூடாது எனவும் அறிவுரை கூறியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.