திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாழும் வள்ளுவரே!.. கவனம் ஈர்த்த ரஜினி ரசிகர்களின் போஸ்டர்: மதுரையில் பரபரப்பு..!
நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை ஒட்டி அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் மதுரையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், பெருங்குடி பகுதியை சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தினர், மதுரை மாநகரில் வித்தியாசமான வாசகங்களுடன் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்களில், வாழும் வள்ளுவரே என்ற வாசகங்களுடன் ரஜினியை திருவள்ளுவர் அலங்காரத்தில் அச்சிட்டுள்ளனர்.
மேலும் அவரினிது இவரினிது என்பர் ரஜினி புகழும் குணமும் அறியாதோர் என்று புதிய குறள் ஒன்றை எழுதி அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது மதுரை மாநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போல பல்வேறு வாசகங்கள் கொண்ட பல போஸ்டர்கள் ரஜினி ரசிகர்களால் மதுரை மாநகரில் ஒட்டப்பட்டுள்ளது.