மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எழவெடுத்த நாய்களா.? கமல் மற்றும் விஜய் டிவியை கிழித்து தொங்கவிட்ட வேல்முருகன்.!
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அந்த கட்சியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது பிக்பாஸ் நிகழ்ச்சியையும், விஜய் தொலைக்காட்சியையும் வன்மையாக கண்டித்திருந்தார். அப்போது பேசிய அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியை போய் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
பிக்பாஸ் பார்த்தீங்களா? பிக் பாஸ் ஒரு பையனும், ஒரு பெண்ணும் அரைகுறையாக கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்துட்டு கிடக்குறாங்க, கண்ணாடிக்கு கண்ணாடி வைத்து முத்தம், படுக்கையறையில் போனா முத்தம், பாத்ரூமில் போனா முத்தம் எழவெடுத்த நாய்களா, இதுவாடா என் தமிழ் சமுதாயத்துக்கு நீங்க தருகின்ற செய்தி? நான் இந்த கூட்டத்திலிருந்து எச்சரிக்கின்றேன். விஜய் தொலைக்காட்சியை எச்சரிக்கின்றேன், கமலஹாசன் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். என் தமிழுக்கென ஒரு தனி குணம் உண்டு. என் தமிழ் சமூகத்தை கேவலமான, மோசமான, அநாகரிக பண்பாட்டு சீரழிவுக்கு அழைத்துச் செல்லாதீர்கள்.
தொடர்ந்து இந்த அசிங்கங்கள் அந்த பிக் பாஸில் அரங்கேறும் என்றால் ஒரு நாள் பிக்பாஸ் என்கின்ற அந்த கூடம் இருக்காது. என்பதை நான் எச்சரிக்க விரும்புகின்றேன். என்று கூறியுள்ள அவர் ,எந்த பண்பாட்டை இளைய தலைமுறையினருக்கு விதைக்கிறீங்க? எந்த நாகரிகத்தை என் இளைய தலைமுறைக்கு சொல்லித்தர வரீங்க? எவ்வளவு பெரிய அநியாயம், அக்கிரமம், கோடிக்கணக்கான மக்கள் பார்க்கின்ற, குடும்பம் குடும்பமாக பார்க்கின்ற அந்த தொலைக்காட்சியில் எப்பவும் இரட்டை வசனங்கள் வேற நிகழ்ச்சி இல்லையா உங்களுக்கு? தரமான நிகழ்ச்சியை உங்களால் தயாரிக்க முயவில்லை என்றால் இழுத்து மூடிட்டு போங்கடா.
ரேட்டிங் என்கின்ற பார்வையாளர்களை கவர்வதற்காக பன்னாட்டு கார்ப்பரேட், பெரும் நிறுவனங்கள், விளம்பர சுரண்டலுக்கு என் மொழியையும், என் இனத்தையும் பண்பாட்டையும் என் ஆண், பெண் உறவு என்கின்ற அந்த தாம்பத்தியத்தையும் படுக்கையறையில் காட்டுகின்ற மோசமான கலாச்சார சீரழிவு போன்றவற்றைக் கொண்டு வந்து எங்கள் மீது திணிக்காதீர்கள்.
சொல்ல முடியாது, சேலத்தில் இருக்கிற இளைஞர் ஆயிரக்கணக்கானவர்களிலே ஒரு 100 பேர தம்பி சுரேஷ் கூட்டிட்டு வா, ஒரு 50 பேரு சிலம்பு கூட்டிட்டு வா, ஒரு 10 பேர முத்து கூட்டிட்டு வா, பிரபு ஒரு 25 பேர கூட்டிட்டு வா, உங்களுக்கு டார்கெட்டே பிக் பாஸ் நான் கொடுக்கிறேன்.
டார்கெட்.
ஒரு மாத காலத்திற்குள் விஜய் டிவியும், கமல்ஹாசனும் இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்யவில்லை என்றால் அங்கே அதற்கான ஸ்டூடியோ, அதற்கான படப்பிடிப்பு கூடம் ஆகியவை இருக்காது என்பதை எச்சரிக்க நீங்கள் அணி திரட்டி கொண்டு வாருங்கள் எனக்கு கூறினார்.