மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஹிட் இயக்குனர் படத்தில் வில்லனாகும் பிக்பாஸ் ஆரவ்! ஹீரோ யார்னு பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி வெற்றியாளரானவர் ஆரவ். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது நடிகை ஓவியாவுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கினார். மேலும் ஆரவ் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்பே ஓ காதல் கண்மணி சைத்தான் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பின்னர் பிக்பாஸ் வெற்றியாளரான அவருக்கு பட வாய்ப்புகள் வரத் துவங்கிய நிலையில் அவர் மார்க்கெட் ராஜா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. மேலும் ஆரவ் ராஜபீமா என்ற படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார்.அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த நிலையில் அதன் பின்னர் படம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
இந்த நிலையில் நடிகர் ஆரவ் தற்போது வில்லனாக களமிறங்கவுள்ளார். அதாவது தமிழில் தடையறத் தாக்க, தடம், மீகாமன் போன்ற ஹிட் படங்களை கொடுத்த மகிழ் திருமேனி இயக்கும் புதிய படத்தில் ஆரவ் வில்லனாக நடிக்க உள்ளாராம். அப்படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலினும், அவருக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வாலும் நடித்து வருகின்றனராம். பிக்பாஸிற்கு பிறகு ஹீரோவாக நடித்து வந்த ஆரவ் இப்படத்தின் கதையை கேட்டவுடனேயே வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.