மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வில்லனாகும் சாக்லேட் பாய் ஆர்யா! அதுவும் யாருக்கு பார்த்தீர்களா! வெளியான மாஸ் தகவல்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சாக்லெட் பாயாக இளம்பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் ஆர்யா. அவர் நடிப்பில் இறுதியாக டெடி திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆர்யா பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார்.
60,70ஸ் காலகட்டங்களில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வரும் ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து விஷால் மற்றும் ஆர்யா எதிரிகளாக எனிமி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் வெற்றி இயக்குனரான லிங்குசாமி முதல்முறையாக தெலுங்கில் படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோவாக ராம் பொத்தினேனி நடிக்கிறார். மேலும் ஹீரோயினாக
கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இதில் ஸ்ட்ராங்கான வில்லன் கதாபாத்திரத்தை உருவாகியுள்ளதாகவும், அதில் ஆர்யாவை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.