மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மிரட்டலான வில்லனாகும் நடிகர் ஆர்யா! அதுவும் எந்த ஹீரோவிற்கு பார்த்தீர்களா! வெளியான தகவலால் செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கும் நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால். இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 2011ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விஷால், ஆர்யா இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது முழு திறமைகளையும் வெளிப்படுத்தி பிரமாதமாக நடித்து இருந்தனர். அப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் விஷால், ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இந்நிலையில் விஷால் தற்போது சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதை தொடர்ந்து விஷால் மற்றும் ஆர்யா இருவரும் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து, இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளனர். மேலும் இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா விஷாலுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.