மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜிவி பிரகாஷ் குமாரை இயக்கும் சினிமா விமர்சகர்? அடடே இவரே?
தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் தற்போது தனது நூறாவது திரைப்படமான சூர்யாவின் புறநானூறு திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
அதேபோல் நடிகராக 25 திரைப்படங்கள் என்ற சாதனையையும் படைக்க உள்ளார். மேலும் இவரது நடிப்பில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதனிடையே பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் புதிய வெப் தொடரிலும் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் குமார், பிரபல சினிமா விமர்சகரான அபிஷேக் ராஜா இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.