#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இவங்களுமா.. பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ள முன்னாள் காதலர்கள்! வைரலாகும் நெருக்கமான புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். தற்போது வரை இதில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் மேலும் பிக்பாஸ் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கியுள்ளது.
இதில் பிக்பாஸ் ஐந்து சீசன்களிலும் கலந்துகொண்ட சில பிரபல போட்டியாளர்கள் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளனர். அவ்வாறு பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்துகொண்டு பிரபலமான நிரூப்பும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் நேற்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நாமினேஷன் நடைப்பெற்றுள்ளது.
அப்பொழுது பேசிய நிரூப், அபிராமியுடன் சில காலம் தான் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், அப்போது இருந்த அபிராமிக்கும், தற்போது இருக்கும் அபிராமிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இந்த இடைபட்டகாலத்தில் அவருக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. நான் இங்கு அவரிடம் பேசும் எண்ணத்தில் இல்லை. அவரது இந்த மாறுதலுக்காக நான் அவரை நாமினேட் செய்கிறேன் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் அபிராமி மற்றும் நிரூப் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இதற்கு முன்பு நிரூப், நடிகை யாஷிகாவை காதலித்ததாகவும், சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.