மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலக அழகி ஐஸ்வர்யா ராயின் பிறந்தநாளிற்கு அவரது கணவரின் பதிவு.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!
இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர் தனது 21 வது வயதில் உலக அழகி பட்டத்தை வென்று தொடர்ந்து சினிமாக்களில் நடித்து வருகிறார். இவருக்கு பின்பாக பல உலக அழகிகள் வந்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா ராய் மட்டுமே இன்றும் உலக அழகியாக திகழ்ந்து வருகிறார்.
மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பை ரசிகர்கள் பாராட்டி கமெண்ட் செய்து வந்தனர்.
இவ்வாறு தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி மொழி சினிமாக்களில் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஐஸ்வர்யா ராய். ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஐஸ்வர்யா ராய் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு பதிவிட்டுள்ளார்.
இவருக்கு வாழ்த்து தெரிவித்த இவரது கணவர் கருப்பு வெள்ளை நிறங்களுடைய ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிறந்தநாளுக்கு இப்படியா வாழ்த்து சொல்வீர்கள? உங்களுக்கு காதலே இல்லையா? என்று திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.