ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நிறைவேறா ஆசையுடன் உயிரை விட்ட ரஜினி,கமல் பட நடிகர்.?



Acter dilip wish want to act hero in cinema

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு. அந்த ஆசை நிறைவேறி திரைத்துறையில் வெற்றி பெறுபவர் வெகு சிலரே. இவ்வாறு பெங்களூரில் இருந்து தமிழ் சினிமாவில் நடிப்பதற்காகவே தமிழ்நாட்டிற்கு வந்தவர் நடிகர் திலீப். இவர் தமிழில் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களாகவும், கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

ரஜினி

மேலும் கமல் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான 'வறுமையின் நிறம்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின்பு கதாநாயகனாக வேண்டும் என்று பலமுறை முயற்சித்தும் தொடர்ந்து துணை கதாநாயகன் கதாபாத்திரமே கிடைத்தது.

இவர் ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இதனால் மீண்டும் துணை கதாபாத்திரமாக நடித்த திலிப் தூங்காதே தம்பி தூங்காதே, சம்சாரம் அது மின்சாரம், எங்க ஊரு பாட்டுக்காரன், ஊருக்கு உபதேசம் போன்ற திரைப்படங்களில் நடித்த பிரபலமானார்.

ரஜினி

ஆனால் இவரின் ஆசையின்படி கடைசி வரை கதாநாயகனாக ஒரு படத்துக்கு கூட ஹிட் கொடுக்கவில்லை. இவரின் கடைசி படமான விசு இயக்கத்தில் 'சிகாமணி ரமாமணி' திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன்பின் 52 வயதில் வீட்டிலேயே நிறைவேறா ஆசையுடன் உயிரை இழந்தார்.