திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்த சின்ன பையன் எந்த பிரபல நடிகர் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து வருகிறார். ஜீவா தமிழில் முதன் முதலில் கதாநாயகனாக 'ஆசை ஆசையாய்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
படத்தின் வெற்றிக்கு பின் தித்திக்குதே, டிஷ்யூம், ராம், பொறி போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். மேலும் கோ, நண்பன், நீதானே என் பொன்வசந்தம், என்றென்றும் புன்னகை, யான் போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்துள்ளார்.
தற்போது திரைப்படங்களில் நடிக்காமல் இடைவேளை எடுத்துக்கொண்ட நடிகர் ஜீவா கதைகளை கேட்டு வருகிறார். தனக்கான சரியான கதை கிடைத்த பின் நடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் பிஸியாக வரும் ஜீவாவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்காக ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சிறுவயதில் இருந்து தற்போது வரை மாறாமல் அப்படியே இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.