மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக் பாஸ் கவினை பங்கமாக கலாய்த்த நெல்சன்.. என்ன சொன்னார் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் நெல்சன் திலிப் குமார். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை அளித்துள்ளார். நயன்தாரா நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா' வெற்றி திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார்.
முதல் படமே ஹிட்டாகியதை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இயக்குவதற்கு குவிந்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் 'டாக்டர்' திரைப்படமும், விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படமும் இயக்கி சினிமா ரசிகர்களுக்கு விருந்தை படைத்தார்.
தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படம் உருவாகி வருகிறது. இது போன்ற நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான கவின் இந்நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமானார்.
மேலும், கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை பற்றி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்ததாக முதலில் நெல்சனிடம் தான் கவின் கூறியிருக்கிறார். அதற்கு நெல்சன் "இங்க சும்மா தானே இருக்கிற அதுக்கு பிக் பாஸாவது போ" என்று கலாய்த்தாராம். இதன் பின்பே கவின் பிக் பாஸ் சென்றிருக்கிறார். இச்செய்தி தற்போது வைரலாகி வருகிறது.