மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க மறுத்த மம்முட்டி.? தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட ரஜினிகாந்த்..
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு விஷால், விக்ராந்த் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், தற்போது மும்பையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. 'லால் சலாம்' திரைப்படத்திற்கு ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லால் சலாம் திரைப்படத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்தியாவில் தற்போது மதவெறுப்பை தூண்டும் விதமாக பல படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் ரஜினிகாந்த் முஸ்லிம் கெட்டப்பில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.
இது போன்ற நிலையில், ரஜினிகாந்தின் மொய்தின் பாய் கதாபாத்திரத்தில் இவருக்கு முன்பாக மம்முட்டி நடிக்கவிருப்பதாக படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் கால்ஷீட் காரணமாக நடிக்க மறுத்தார் மம்முட்டி. இதன் பின்பே ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.