மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அந்த விஷயத்துக்கு எல்லாம் நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க" நடிகர் விக்ரமாய் கலாய்த்த இயக்குனர்..
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளில் பல தோற்றங்களில் நடித்த கலக்கி வருபவர் நடிகர் விக்ரம். இவர் தயாரிப்பாளர், பாடகர், நடிகர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் ஆவார். நடிகர் விக்ரம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
முதன் முதலில் தமிழில் 'தந்துவிட்டேன் என்னை' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான 'சேது' திரைப்படமே இவருக்கு பெயர் பெற்று தந்தது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து தனக்கென தனி இடத்தை பெற்றுக் கொண்டார். மேலும் ரசிகர்கள் இவரை சியான் என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் பாலாஜி சக்திவேலுடன் இணைந்து நடிப்பதற்கு ஆசைப்பட்ட விக்ரம் ஒரு கதையை எழுதி விட்டு வருமாறு கூறியிருக்கிறார். ஆனால் பாலாஜி சக்திவேல் கதை எழுதிவிட்டு இந்த படம் உங்களுக்கு செட் ஆகாது என்று கூறியிருக்கிறார். அந்தப் படத்திற்குப் பிறகு பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியான 'காதல்' திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.