மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெரிய இடத்திலிருந்து வந்த பெரிய வாய்ப்பு... அமைதியா இருந்து காரியத்தை சாதிக்கும் ஆக்சன் கிங்.!
90களில் தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் ஆக வலம் வந்தவர் அர்ஜுன். இவரது நடிப்பில் உருவான ஜென்டில்மேன் மற்றும் ஜெய்ஹிந்த் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றனர். 90களில் கதாநாயகனாக நடித்து வந்த இவர் தற்போது குணச்சித்திர வேடம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவர் அஜித் குமாருடன் இணைந்து நடித்த மங்காத்தா என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். விஷால் திரைப்படமான இரும்புத்திரை திரைப்படத்திலும் இவரது வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.
தற்போது தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்திலும் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார் அர்ஜுன். எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இது வேண்டும் அது வேண்டும் என்று தொந்தரவு செய்யும் அவர் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக இருக்கிறார். இதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு வில்லனாக நடிக்க விக்ரமை அழைத்துள்ளனர். 50 கோடி ரூபாய் சம்பளம் தருவதாக கூறியும் அவர் நடிக்க மறுத்து விட்டார்.இதனைத் தொடர்ந்து அந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுனை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் அவர் சூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக இருக்கிறாராம். மிகப்பெரிய சம்பளம் மற்றும் சூப்பர் ஸ்டாருக்கு வில்லன் என்பதால் அர்ஜுன் கண்டிப்பாக சம்மதம் தெரிவிப்பார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.