"இரவில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி!"



Actor aadhi and Nikki Gabe food to flood affected peoples

நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்து, கடந்த ஆண்டு இருவரும் தங்கள் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.

Kollywoodஇந்நிலையில், சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான இடங்கள் இன்னும் முழுதாக  மீளவில்லை. இதையடுத்து பல்வேறு திரைப்பிரபலங்களும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் KPY பாலா, பார்த்திபன், விஜயின் மக்கள் இயக்கம் ஆகியோர் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். மேலும் சூர்யா - கார்த்தி, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் தங்களால் முடிந்த தொகையை நிவாரணத்திற்காக கொடுத்துள்ளனர்.

Kollywood

இந்நிலையில் தற்போது ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி, வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் மக்களுக்கு வீடு வீடாகச் சென்று உணவு வழங்கினர். இரவு நேரத்தில் இவர்கள் ஜோடியாக சென்று உணவு வழங்கியது பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.