திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரஜினியுடன், நிக்கி கல்ராணி செல்பி எடுத்துக் கொண்டதால், கடுப்பான நடிகர் ஆதி.!?
கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் 80களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து தமிழ் திரை துறையில் நடித்து வருகிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியுள்ளார் ரஜினிகாந்த்.
மேலும் தனது நடிப்பு திறமையினாலும், ஸ்டைலினாலும் ரசிகர்களை கவர்ந்த் சூப்பர் ஸ்டார் சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் திரையரங்கில் வெளியான இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்து ரஜினிகாந்த் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது. இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனை அடுத்து தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் பிரபல நடிகையான நிக்கி கல்ராணி இணைந்து செல்பி எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்புகைப்படம் இணையத்தில் வைரலானதையடுத்து நிக்கி கல்ராணியின் கணவரும், நடிகருமான ஆதி, தலைவர் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து செல்பி எடுக்கும் வாய்ப்பை மிஸ் செய்து விட்டேன் என்று கடுப்பில் instagram-ல் பதிவிட்டுள்ளார். இப்பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.