மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் அஜித்துடன் பைக் ரைடு சென்றுள்ள பிரபல நடிகர்.! அட.. யார்னு பாத்தீங்களா!! ட்ரெண்டிங் புகைப்படங்கள்!!
நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விடாமுயற்சி பட படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது.
ஆனால் அங்கு கடுமையான பனிப்பொழிவின் காரணமாக தற்போது படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் தனது பைக் ரைடு தொடர்ந்துள்ளார். மேலும் இடையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அஜித்குமார் உடல் நலம் சரியானதை தொடர்ந்து தனது நண்பர்களுடன் பைக் ரைடு மேற்கொண்டுள்ளளார்.
இந்த பைக் ரைடில் நடிகர் அஜித்துடன் நடிகர் ஆரவ்வும் இணைந்துள்ளார். அவர் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித், ஆரவ் மேலும் பலரும் பைக் ரைடு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.