#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மலர் தொடரில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.! இதுதான் காரணமா.! அவரே வெளியிட்ட பதிவு!!
அன்று முதல் இன்று வரை சன் டிவி தொடர்கள் என்றாலே மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். காலை துவங்கி இரவு வரை சன் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்த தொடர்களில் ஒன்றுதான் மலர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இத்தொடர் 250 எபிசோடுகளை கடந்துள்ளது. இதில் பிரீத்தி ஷர்மா மற்றும் அக்னி இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். இந்நிலையில் தற்போது அந்த தொடரில் இருந்து ஹீரோவாக நடித்து வந்த அக்னி விலகுவதாக அறிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், எதிர்பாராதவிதமாக தனக்கு காயம் ஏற்பட்டுவிட்டதாகவும், அதிலிருந்து மீண்டு வருவதற்காகவும், சீரியல் சுமுகமாக செல்வதற்காகவும் மலர் சீரியலில் இருந்து விலகும் நிலையில் உள்ளேன். இது நாங்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு. இந்த சீரியலுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. இனி அர்ஜுன் கதாபாத்திரத்தில் எனக்கு பதிலாக நடிக்கும் நடிகருக்கும் உங்களது முழு ஆதரவை கொடுங்கள் என தெரிவித்துள்ளார்.