அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
தல அஜித்துக்கு என்னாச்சு?.. திடீரென உடல் மெலிந்த புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் அமோக வெற்றியடைந்ததை தொடர்ந்து, தற்போது நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்காக அவர் ரூ.105 கோடி சம்பளம் வாங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகிய நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்று திரைத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் தெரியவருகிறது.
தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு தனது இருசக்கர வாகனத்தின் மூலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் அஜித்குமார், பலருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.
மேலும் வழியில் தன்னை காணவரும் ரசிகர்களையும் அன்போடு அழைத்து பேசி அவர்களை பாதுகாப்புடன் வாகனத்தை இயக்க அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில் உடல் எடை சற்று அதிகரித்து இருப்பது போல தோற்றமளித்த நடிகர் அஜித், திரைப்படத்திற்காக உடல் எடையை குறைப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதனை உறுதி செய்யும்பொருட்டு அவரின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அதில் உடல் எடை லேசாக குறைந்தது போல இருக்கிறது. இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் என்னாச்சு தல இப்படி மெலிஞ்சிட்டிங்க என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.