மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மங்காத்தாவில் ஓடிய காவலன் படக்காட்சி; அஜித் சொன்ன அசத்தல் ஐடியா..!
நடிகர்கள் அஜித், வைபவ், பிரேம்ஜி, அமரன், அர்ஜுன், ராய் லட்சுமி, மகத், திரிஷா உட்பட பலர் நடித்து கடந்த 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் மங்காத்தா (Mankatha).
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெருவாரியான வரவேற்பு பெற்றது.
பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட ரூ.100 கோடி வரை வசூலை தந்தது. இப்படத்தில் ஒரு காட்சியில், திரையரங்கில் படம் ஓடிக் கொண்டிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கும்.
அந்த காட்சியை எடுக்கும் போது இயக்குனர் வெங்கட் பிரபு அஜித்தின் திரைப்படத்தையே திரையில் திரையிட்டு எடுத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தார்.
ஆனால் நடிகர் அஜித் நான் நடிக்கும் படத்தில் என்னுடைய படக்காட்சியை வைத்தால் நன்றாக இருக்காது. சகோதரர் விஜய் நடித்த படத்தை திரையிட்டுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
அதன் பின்பு அந்த காட்சியில் காவலன் படம் திரையிடப்பட்டுள்ளது.