சமூக பொறுப்புக்காக ரூ‌.10 கோடி வருமானத்தை தவிர்த்த நடிகர் அல்லு அர்ஜுன்: குட்கா, புகை, மது விளம்பரங்கள் தவிர்ப்பு.!



Actor allu arjun disagreed with drugs advertisement

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச அளவில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வசூல் வேட்டையையும், வரவேற்பையும் குவித்த திரைப்படம் புஷ்பா. 

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில் உட்பட பலர் நடிப்பில் ஆந்திராவில் நடக்கும் செம்மர கடத்தல் தொடர்பான விவகாரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மற்றும் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றிருந்தன.

Actor allu arjun

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் புகை மற்றும் மதுபான விளம்பரங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. 

இருப்பினும் அவர் குட்கா, புகையிலை உட்பட போதைப்பொருட்கள் விளம்பரத்திற்கு நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.