திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"பல பாடங்களை கற்று, வாழ்வில் ஒளியேற்றிய ஆண்டு" - புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் அல்லு அர்ஜுன்..!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வந்த நடிகர் அல்லு அர்ஜுன், புஷ்பா திரைப்படத்திற்கு பின்னர் மிக முக்கிய இந்திய நட்சத்திரங்களில் ஒருவரானர்.
புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் இறுதிப்பணியை எட்டியுள்ளன. விரைவில் இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Happy New Year . Happy 2024 pic.twitter.com/mNAs9h9snz
— Allu Arjun (@alluarjun) December 31, 2023
இந்நிலையில், 2023ம் ஆண்டை வழியனுப்பி வைத்துவிட்டு, 2024ம் ஆண்டை கொண்டாட்டத்துடன் உலகமே வரவேற்று வருகிறது. அதனை முன்னிட்டு, நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள பதிவில், "2023ம் ஆண்டு என்னுடன் உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. பல வகைகளில் இந்த ஆண்டு என்னால் மறக்க முடியாத ஆண்டுகளானது. எனது வாழ்வில் ஒளியேற்றிய ஆண்டு. எனது வாழ்க்கையில் பல பாடங்களையும் கற்றுக்கொண்டேன். உங்கள் அனைவர்க்கும் நன்றி. புத்தாண்டு நல்வாழ்துக்கள்" என தெரிவித்துள்ளார்.