திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"நான் விஜய் ஃபேன் தான் ஆனால் விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்" பிரபல நடிகரின் பளீச் பேட்டி..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் இளைய தளபதி விஜய். இவர் தமிழில் 90களின் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்து வந்து கொண்டிருந்தார். பல ஹிட் திரைப்படங்களை ரசிகர்களுக்கு அளித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார் விஜய்.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ. இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது. இப்படத்திற்கு பின்பு விஜய் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் விஜய் அரசியலில் கால் பதிக்க போகிறார் என்று பலரும் கூறிய நிலையில், சமீபத்தில் தமிழக வெற்றி கழக கட்சி ஆரம்பித்து அரசியலில் கால் பதித்துள்ளார் விஜய். மேலும் இவரின் அரசியல் குறித்து இனிமேல் நடிக்கப் போவதில்லை முழு நேர அரசியல்வாதியாக ஈடுபடப் போகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தி ரசிகர்களின் மனதில் சிறு வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
இது போன்ற நிலையில் அரவிந்த்சாமியின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் அரவிந்த்சாமி அந்த வீடியோவில் ரஜினி, அஜித், கமல், விஜய் என யார் அரசியலுக்கு வந்தாலும் ரசிகராக ஓட்டு போட மாட்டேன். அவர்கள் நாட்டில் என்ன மாற்றங்களை உருவாக்குகிறார்கள் என்பதை தெரிந்து தான் ஓட்டு போட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.