மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சினிமா, பிசினஸ் என செம பிஸியாக இருக்கும் சாக்லேட் பாய் ஆர்யாவின் சொத்து மதிப்பு.! எவ்வளவுனு பார்த்தீங்களா??
தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. முதல் படத்திலேயே இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் வர துவங்கியது.
நடிகர் ஆர்யா உள்ளம் கேட்குமே, கலாபக் காதலன், ஓரம்போ, அவன் இவன், நான் கடவுள், மதராசப்பட்டினம், சார்பட்டா பரம்பரை என ஏராளமான வெற்றி திரைப்படங்களில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார். மேலும் அவரது கைவசம் தற்போது சைந்தவ், சார்பட்டா பரம்பரை 2, மிஸ்டர் எக்ஸ் உள்ளிட்ட படங்கள் உள்ளன.
மேலும் நடிகர் ஆர்யா நடிப்பது மட்டுமின்றி பல பிசினஸும் செய்து வருகிறார். இந்த நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் பரவி வருகிறது. அதாவது தான் நடிக்கும் ஒரு படத்திற்கு ரூ 7 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர் ஆர்யாவின் சொத்து மதிப்பு சுமார் 80கோடி வரை இருக்கும் என தகவல்கள் பரவி வருகிறது.