திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் ஆர்யாவா இது.? வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் ஆர்யா. இவர் 2000 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தனது நடிப்பு திறமையினாலும், கவர்ச்சிகரமான தோற்றத்தினாலும் ரசிகர்களை கவர்ந்து திரைத்துறையில் சாக்லேட் பாய் என்ற பெயர் பெற்றவர். ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகளே இவருக்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் முதன் முதலில் அறிந்து அறியாமலும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்தார். முதல் படமே மிகப் பெரும் வெற்றி அடைந்து தென்னிந்திய ஃபிலிம் ஃபார் விருதை வென்றார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இவர் நடிப்பில் வெளியான அவன் இவன், மதராசபட்டினம், பட்டியல், சர்வம், சார்பட்டா பரம்பரை, ஆரம்பம், டெடி போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்தது. சினிமாவில் உச்சத்தில் இருந்து வந்த ஆர்யா சக நடிகையான சாயிஷா இவ்வாறு காதலித்த திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில் தற்போது எக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் ஆர்யா, படத்திற்காக தனது உடலை உடற்பயிற்சி செய்து மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி நடிகர் ஆர்யாவா இது? என்று ரசிகர்கள் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.