மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா தொற்று உறுதி! நடிகர் விஜய்யின் ரீல் அப்பா மருத்துவனையிலிருந்து வெளியிட்ட வீடியோ!!
தமிழில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தில் என்ற படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஆஷிஷ் வித்யார்த்தி. அதனைத் தொடர்ந்து அவர் அர்ஜுன் நடித்த ஏழுமலை, விஜய் நடித்த பகவதி, தமிழன் மற்றும் கில்லி படத்தில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் இறுதியாக அனேகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஆஷிஷ் வித்யார்த்தி ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில், நான் கோவிட் பரிசோதனை செய்து கொண்டேன். அதில் பாசிட்டிவ் என்று வந்தது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தவறாமல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் தற்போது மருத்துவமனையில் இருந்து செம எனர்ஜியாக, பிறரை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார். அது வைரலாகி வருகிறது.