மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சில்லுனு ஒரு காதல் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா! சூப்பரா இருந்திருக்கும்.. இப்படி மிஸ் பண்ணிட்டாங்களே!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, ஜோதிகாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், மாயாவி, பேரழகன், காக்க காக்க என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ரசிகர்களை கவர்ந்தது.
ஆனால் அவற்றில் தற்போதும் ரசிகர்களின் பேவரைட் திரைப்படமாக இருப்பது சில்லுனு ஒரு காதல். இப்படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சூர்யா, ஜோதிகா இருவரின் நடிப்பும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தது. மேலும் இத்திரைப்படத்தில் ஐஷூ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் பூமிகா.
ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடக்கவிருந்தது நடிகை அசினாம். இதுகுறித்து நடிகை அசினிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் அதற்கு அசின் மறுப்பு தெரிவித்ததால், அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகை பூமிகாவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் இப்படி மிஸ் பண்ணிட்டாங்களே எனக் கூறி வருகின்றனர்.