மீண்டும் சன் டிவிக்கு தாவும் நடிகர் அசீம்! அதுவும் எந்த பிரபல சீரியலில் நடிக்கவுள்ளார் தெரியுமா?



actor-azeem-going-to-act-in-poove-unakaga-serial-in-sun

சன் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பூவே உனக்காக. கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இந்த தொடர் வெற்றிகரமாக 250 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் ஹீரோவாக கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் அருண். அவர் ஒரு சில காரணங்களாக இந்த தொடரில் இருந்து விலகிவிட்டார். மேலும் இதுகுறித்து அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் பூவேஉனக்காக தொடரில் கதிராக நடிக்கப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தநிலையில் தற்போது நடிகர் அசீம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 Azeem

அதாவது சன் தொலைக்காட்சியில் பிரியமானவளே என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அசீம். அதிலிருந்து பாதியிலேயே விலகிய அவர் விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு தொடரில் ஹீரோவாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டிசிங்கம் என்ற தொடரிலும் நடித்தார். இந்த நிலையில் அசீம் தற்போது மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக தொடரில் நடிக்க உள்ளார் எனவும், அதற்காக சூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.