மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நடிகர் அஜித் எனக்கு உதவ மறுத்துவிட்டார்" பாவா லட்சுமணனுக்கு நேர்ந்த சோகம்.!
வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் பாவா லட்சுமணன். இவர் "மாயி" படத்தில் "வாம்மா மின்னல்" என்ற வசனத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். தொடர்ந்து இவர் ஆனந்தம், ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில், அரசு, வின்னர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் வராத நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக பெயிண்டர் வேலை செய்து வருவதாக ஒரு பேட்டியில் பாவா லட்சுமணன் கூறியிருந்தார். இந்நிலையில் இவர் சர்க்கரை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
தொடர்ந்து சர்க்கரை நோயின் தாக்கம் காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் இவரது கால் கட்டை விரல் அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு பேட்டியில் பாவா லட்சுமணன், "தனக்கு யாரென்றே தெரியாத கேபிஒய் பாலா, இயக்குனர் சமுத்திரக்கனி ஆகியோர் உதவினர்.
அஜித் மற்றும் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்துள்ளேன். ஆனால் அவர்கள் இருவருமே எனக்கு உதவில்லை. நான் கஷ்டப்பட்ட காலத்தில் விவேக் சார், மயில்சாமி, மனோபாலா சார் ஆகியோர் தான் எனக்கு நிறைய உதவி செய்துள்ளனர்" என்று பாவா லட்சுமணன் கூறியுள்ளார்.