மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வடிவேலு நல்ல மனுஷன் கிடையாது" பேட்டியில் வடிவேலுவை திட்டி தீர்த்த பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருந்து வருபவர் வடிவேலு. இவர் தமிழில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் மாமன்னன். இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. மேலும் வடிவேலுவின் கதாபாத்திரத்தை ரசிகர் பாராட்டி வந்தனர்.
இப்படத்திற்குப் பின்பு தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் வடிவேலு. இது போன்ற நிலையில் சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த அதிர்ச்சி செய்தி இணையத்தில் பரவியது. மேலும் பல திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தனர். அந்த வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.
மேலும் கேப்டன் விஜயகாந்தின் இறப்பிற்கு வடிவேலு வரவில்லை என்பதால் சில திரை பிரபலங்களும், ரசிகர்களும் வடிவேலுவை திட்டி வந்தனர். இதற்கு முன்னதாக வடிவேலு அரசியலில் இருந்தபோது விஜயகாந்தை கண்டபடி பேசி இருந்தார். இந்த பிரச்சனை காரணமாகவே வடிவேலு விஜயகாந்த் அவர்களை பார்க்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில் வடிவேலுவுடன் துணை காமெடி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பெஞ்சமின் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அப்பேட்டியில் விஜயகாந்த் இறப்பிற்கு வடிவேலு வராதது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பெஞ்சமின் "நான் சினிமாவிற்கு வருவதற்கு வடிவேலு தான் காரணம். வடிவேலு ஒரு நல்ல நடிகர், ஆனால் அவர் ஒரு நல்ல மனுஷன் கிடையாது" என்று கண்டபடி திட்டி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.