மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே.. 7 மாதங்கள் கோமா., வீட்டிலேயே சிகிச்சை..! பிரபல விஜய் டிவி சீரியல் நடிகரின் மனைவி பரிதாப மரணம்..! ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!!
சின்னத்திரையில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் பரத் கல்யாண். இவர் தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர் உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மேலும், இவர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னதாக கோமாநிலைக்கு சென்றுவிட்ட காரணத்தால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 5 மணியளவில் பிரியா மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் பரத் குடும்பத்தினரையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் பலரும் பரத் கல்யாணுக்கு ஆறுதல்கூறி மனதை தேற்றி வருகின்றனர்.