மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. காமெடி நடிகர் சாம்ஸின் மகனா இது.! ஹீரோ மாதிரி சூப்பரா இருக்காரே.! தீயாய் பரவும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சாம்ஸ். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டான காதல் மன்னன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவரது காமெடி அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நன்கு வரவேற்பை பெற்றிருந்தது. நடிகர் சாம்ஸின் மகன் யோஹன். அவர் தற்போது ராமின் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் முறைப்படி கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றுள்ளாராம். மேலும் தனியார் திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் பயிற்சியையும் முடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் சாம்ஸ் தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்து, எனது மகன் யோஹன் “FALL” என்ற வெப் சீரிசில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திரையுலக பயணத்தை தொடங்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக பல வெற்றி படங்களை தந்த திரு சித்தார்த் அவர்கள் முதல் முறையாக இயக்கி, அஞ்சலி அவர்கள் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.இது Disney+ Hotstarல் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது என பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் யோஹன் ஹீரோ போல இருப்பதாக கூறி வருகின்றனர்.