மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பலமா சிக்கிட்டாரு போல.. "அதிதி எனக்கு தங்கச்சி மாதிரி" - திடீர் பல்டியடித்த கூல் சுரேஷ்..! சங்கர் விட்ட டோஸ் தான் காரணமா?.!!
இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடித்துள்ள திரைப்படம் "விருமன்". இப்படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து ராஜ்கிரண், சூரி, பிரகாஷ்ராஜ் மற்றும் கருணாஸ் போன்ற பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விருமன் படத்தை பார்த்துவிட்டு வந்து பேசிய நடிகர் கூல் சுரேஷ், "விருமன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தேன். விருமன் படம் விறுவிறுப்புடன் இருக்கிறது.
படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதீதி நடித்துள்ளார். அவர் சிறப்பாக நடித்துள்ளார். நான் இயக்குனர் சங்கரின் மகள் அதிதியை காதலிக்கிறேன். நீங்கள் எடுக்கும் படத்தில் காதலை சேர்த்து வைப்பீர்கள். நான் உங்களின் மகளை காதலிக்கிறேன். எங்களின் காதலை சேர்த்து வையுங்கள்.
செய்தியாளர்கள் முன்பே காதலை வெளிப்படுத்துகிறேன். நீங்கள் பணக்கார மனிதர். உங்களின் மகளை உங்கள் அளவுக்கு பார்த்துக்கொள்ள முடியாவிட்டாலும், கயிற்று கட்டிலில் அமர வைத்து கால் அமுக்கி விடுவேன்.
என்று கூறினார்.
இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த கூல் சுரேஷ், "என்னுடன் தேன்மொழி என்ற என் படித்தாள். படத்தில் அதிதியை பார்த்ததும் நான் மிகவும் உணர்ச்சியடைந்து அவ்வாறு கூறிவிட்டேன். சங்கர் சார் என்னை மன்னிச்சிடுங்க. உங்களை விமர்சிக்கும் அளவிற்கு நான் பெரிய ஆள் எல்லாம் கிடையாது.
அதிதியை நான் எனது காதலி என்று கூறிவிட்டேன். ஆனால் அதிதி என் காதலி கிடையாது. அவர் எனக்கு தங்கை முறை வேண்டும். அதிதி நீங்கள் எனக்கு ஒரு தங்கை என்று கூறியுள்ளார். மேலும் நான் செய்தது தவறு. ஷங்கர் சார் என்னை மன்னிச்சிடுங்க. என்னை மன்னிச்சிடுங்க" என்று மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதனை கண்ட நேட்டிசன்கள், "என்ன ஆயிருச்சு? திடீரென கூல் சுரேஷ் பல்டி அடித்துவிட்டார் ஒரு வேலை இதற்கெல்லாம் சங்கர் சார் விட்ட டோஸ் தான் காரணமாக இருக்குமோ? பயங்கரமா சிக்கிட்டாபுள்ள என்று கலாய்த்து வருகின்றனர்.