பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
"இனி ஐஸ்வர்யாவுடன் இணைய வாய்ப்பில்லை.. அதற்காக இப்படியா?".. பிரபல நடிகையுடன் இரவு பார்ட்டியில் நடிகர் தனுஷ்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!
இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் "திருச்சிற்றம்பலம்".இப்படம் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷின் திரைப்படத்தை ரசிகர்கள் மிகவும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்து சில நாட்களுக்கு முன்னதாக, தனுஷ் தியேட்டரில் படக்குழுவினரோடு திருச்சிற்றம்பலம் படம் பார்க்க வந்த நிலையில், தனது மகன்களை விட்டுவிட்டு ராஷிக்கண்ணாவின் கையை பிடித்து ஓடிய வீடியோ வெளியாகி இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது.
இதன் பின்னர் தனுஷின் மூத்தமகன் யாத்ராவின் பள்ளியில் அவர் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா என குடும்பத்தினர்கள் ஒன்றிணைந்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அது இணையத்தில் வைரலாகியது.
அந்த வகையில் தற்போது தனுஷ் பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இருவரும் கருப்பு உடையணிந்து மிக நெருக்கமாக இரவு பார்ட்டியில் போஸ் கொடுத்துள்ளனர்.
இப்புகைப்படம் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்கான பார்ட்டியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுவதை தொடர்ந்து, பல பிரபலங்களும் இதில் கலந்துகொண்டனர். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணைய வாய்ப்பே இல்லை. அதற்காக இப்படியா? என கோபத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.