மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுவயதிலேயே அப்படி.. தனுஷ் அடம்பிடித்தும் கிடைக்காத ரிமோட் கார்.. என்ன செய்தார் தெரியுமா?.. தனுஷின் மாஸ் சம்பவம்.!
துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவர் முதலில் மோசமான விமர்சனங்களை பெற்ற போதிலும், அதனை எல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாமல் தொடர்ந்து நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
எந்த கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டாலும் நடிப்பில் அவர் அதகளம் செய்து கொண்டிருக்கிறார். தற்போது தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில், பத்திரிக்கையாளர் செய்யாறு பாலா தனுஷ் குறித்து ஒரு தகவலை சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதில், கஸ்தூரிராஜா இயக்குனராக இருந்தாலும், குடும்பம் நடுத்தர வர்க்கமானது தான்.
சிறு வயதில் தனுஷ் பக்கத்து வீட்டில் இருந்த பையன் ஒருவன் ரிமோட் காரை வைத்து விளையாடிக் கொண்டிருப்பதை கண்டு, தனக்கும் அது போன்ற ஒரு ரிமோட் கார் வேண்டும் என அடம் பிடித்துள்ளார்.
ஆனால், விலை உயர்ந்த பொருளை தந்தை வாங்கி கொடுக்கவில்லை. இதன் காரணமாக தான் வளர்ந்து சம்பாதித்த பிறகு உயர் ரகத்தில் ஒரிஜினல் கார் ஒன்றை வாங்க வேண்டும் என்று உறுதி எடுத்து இருக்கிறார் தனுஷ்.
இதன்பின் வளர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, உயர் ரகத்தில் விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கி தனது வீட்டின் செட்டில் நிறுத்தி வைத்து இருக்கிறார். ஒருமுறை செய்யாறு பாலா ஏன் சார் இந்த காரை யூஸ் பண்ண மாட்டீங்களா? என்று கேட்டதற்கு சிறுவயதில் நடந்த அந்த ரிமோட் கார் விஷயத்தை தனுஷ் கூறியிருக்கிறார்.
மேலும், இந்த காரை இந்திய சாலைகளில் ஓட்டுவது கடினம். 500 மீட்டர் தூரம் செல்வதற்குள் இரண்டு லிட்டர் பெட்ரோலை காலி செய்யும் என்றும் கூறியுள்ளார்.