மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுப்பிரமணியபுரம்: ஜெய் செத்துருவார் னு சொன்னதும்...! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை என்ன செய்தார் தெரியுமா?..!
நடிகர் ஜெய் சுப்பிரமணியபுரம் படத்தில் இறப்பது தொடர்பான காட்சிகளை படமாக்கும் போது, திரைப்பட நடிகை ஸ்வாதி என்னிடம் கோபப்பட்டார் என நடிகர், இயக்குனர் சசிகுமார் தெரிவித்தார்.
நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமாரின் தயாரிப்பில் எழுதி, இயக்கப்பட்ட திரைப்படம் சுப்பிரமணியபுரம். இந்த படத்தின் நாயகனாக நடிகர் ஜெய் நடித்திருந்தார். நாயகியாக நடிகை ஸ்வாதி நடித்திருந்தார். மேலும், பிற திரைப்பட நடிகர்களான சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உட்பட பலரும் நடித்திருந்தனர்.
கடந்த 2008 ஆம் வருடம் ஜூலை 4 ஆம் தேதி வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படம், ரூ.65 இலட்சம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, அன்றைய நாளிலேயே ரூ.30 கோடி வசூல் செய்தது. மேலும், கன்னடா மற்றும் மலையாளம் மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியானது. இப்படத்தின் கண்கள் இரண்டால் பாடல் இன்று வரை பலராலும் கேட்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மற்றும் இயக்குனர் சசிக்குமார், சுப்பிரமணியபுரம் படத்தின் படப்பிடிப்பு நாட்கள் தொடர்பான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இதுதொடர்பான பேட்டியில், "படத்தின் கதை மற்றும் கண்கள் இரண்டால் பாடலை தயார் செய்துவிட்டு, நடிகர்கள் - நடிகைகளை தேடிக்கொண்டு இருந்தேன்.
அப்போது, கோடம்பாக்கம் - வடபழனி வழியாக செல்கையில் சென்னை 28 படம் வெளியான நேரம் அது. 12 பேரின் முகம் சென்னை 28 படத்தின் போஸ்டரில் இருந்தது. அதில் இருந்து நடிகர் ஜெய் தேர்வு செய்யப்பட்டார். முதலில் அவர் தாடியுடன் இல்லாமல் இருந்த நிலையில், அவரை தாடி வளர்க்க சொல்லி மதுரையில் பல்வேறு இடங்களை 5 நாட்கள் பார்ப்பதற்கு அனுப்பி வைத்தேன்.
நடிகையாக நடிக்க பலரையும் தேடிக்கொண்டு இருக்கையில், ஸ்வாதி தெலுங்கு படத்தில் பிரபல நடிகைக்கு தங்கை கதாபாரத்தில் நடித்து இருந்தார். அவரிடம் படம் குறித்து பேசுகையில், ஒருவாரம் கழித்து மதுரைக்கு வருகிறேன் என்று தெரிவித்தார். அவர் மதுரைக்கு வந்ததும் படத்தின் கதையை கேட்ட நிலையில், நான் ஜெய்யிடமும் படத்தின் கதையை கூறவில்லை.
கதையை கூறினால் நடிப்பார்களா? என்ற சந்தேகத்தில், ஒரே வரியில் படத்தை சொல்லிமுடித்த நிலையில், கண்கள் இரண்டால் பாடலை அவர்களை கேட்க வைத்ததும், நடிக்க ஒப்புக்கொண்டார். அப்போதே, படத்தின் முடிவு Happy Ending ஆ? அல்லது Tragedy End ஆ? என கேட்டார்கள். நான் சூதனமாக உங்களுக்கு Happy Ending என்று தெரிவித்து முடித்தேன்.
படத்தின் படப்பிடிப்பு தொடங்கி அனைத்தும் நடந்து வந்த நிலையில், Climax காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது, ஜெய் இறப்பது தொடர்பான காட்சிகள் வந்ததும், என்னிடம் கோபம் கொண்டு நடிக்காமல் சென்றார். பின்னர், அவரை தொடர்பு கொண்டு சமாதானம் செய்த நிலையில், அவர் வருத்தத்துடன் இருந்தார். அந்த வருத்தம் எனக்கு தேவைப்பட்டது என்பதால், அதனை அப்படியே நடிக்க வைத்தேன்" என்று தெரிவித்தார்.