மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பைசா தராத வடிவேலும்., நானும்".. இந்த நிலைக்கு காரணம் யார்?: மனம் திறந்த கஞ்சா கருப்பு.!
தமிழ் திரையுலகில் காமெடி காட்சிகளில் தோன்றி, மக்களிடையே வைகை புயலாக அங்கீகரிக்கப்பட்டவர் வடிவேலு. என்னதான் தமிழ் திரையுலகம் பல காமெடியன்களை கண்டாலும், வடிவேலுக்கு இணை வடிவேலு என்ற நிலை இருக்கிறது.
அதேபோல, தமிழ் திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் கஞ்சா கருப்பு. இவர் சமீபத்தில் அதிக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இந்நிலையில், வடிவேலு குறித்து அவர் ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார்.
அதாவது, பேட்டி ஒன்றில் வடிவேலு குறித்து அவர் பேசுகையில், "நடிகர் வடிவேலு யாருக்கும் உதவி செய்யமாட்டார். அவர் யாரின் வீட்டிற்கு சென்றாலும், வீட்டின் வாசலில் பெட்ரோலுக்கு ரூ.1,500 பணம் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி செல்வார்.
அதனாலேயே அவர் இன்று நல்ல நிலையில் இருக்கிறார். நானோ பல்வேறு உதவிகளை செய்து இருக்கிறேன். இதனால் இப்போது இந்நிலையில் இருக்கிறேன்" என வருத்தத்துடன் தெரிவித்தார்.