மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வதந்திகளால் மனமுடைந்த ஜனகராஜ். என்ன ஆனார் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் ஜனகராஜ். இவர் 1978ஆம் வருட காலகட்டத்தில் இருந்து 2000 ஆண்டு வரை பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி நட்சத்திரமாக கலக்கி வந்தார்.
கவுண்டமணி, செந்தில் காமெடி திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் போது தனது நடிப்பு திறமையின் மூலம் சினிமாவில் காமெடி நடிகராக உச்சம் பெற்றார். 80களின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் போன்ற பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தவர் ஜனகராஜ்.
இதுபோன்ற நிலையில், தற்போது ஜனகராஜ் குறித்து இணையத்தில் வதந்தி பரவி வருகிறது. இது குறித்து அவர் தற்போது ஒரு பேட்டியளித்துள்ளார். அப்பேட்டியில் ஜனகராஜ் கூறியதாவது, "நான் அமெரிக்காவில் உடல்நிலை சரியில்லாமல் செட்டில் ஆகிவிட்டேன் என்றும், ரஜினி என்னை வந்து பார்த்ததாகவும் வதந்தி பரப்பி வருகின்றனர்.
நான் சென்னையில் தான் நன்றாக உள்ளேன். இந்த வதந்திகளால் எனக்கு வரவிருக்கும் பட வாய்ப்பு வராமல் போகிறது. இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறேன்" என்று மனம் திறந்து பேசியுள்ளார். இச்செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.