#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கடவுளே.. நடிகர் ஜெயம் ரவிக்கு இப்படியொரு பிரச்சினையா! பாதியிலேயே நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் பூமி. இப்படம் ஓரளவிற்கே வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் அகமது இயக்கத்தில் ஜன கண மன என்ற படத்தில் நடித்திருந்தார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் ஜெயம் ரவி முக்கிய ரோலில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படமும் விரைவில் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி மீண்டும் இயக்குனர் அகமதுவுடன் இணைந்து நடிக்க உள்ளார். சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகவிருக்கும் இதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.
இந்நிலையில் அகமது படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஜெயம் ரவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாம். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.