#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முடக்கப்பட்டதா ஜெயம் ரவியின் ட்விட்டர் கணக்கு? பின்னணியில் பிரபல நடிகர்!
தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படம் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் ரவி. இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து வெறும் ரவியாக இருந்த இவர் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டார்.
கலவையான திரைப்படங்களில் நடித்துவந்த இவர் கடைசியாக டிக் டிக் டிக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் ஓரளவுக்கு மக்களிடம் வரவேற்பை பெற்றாது.
தற்போது இவர் அடங்க மறு என்ற படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களிலும் அவர் எப்போதும் ஆக்டிவாக எதாவது கருத்துக்கள் மற்றும் புகைப்படங்கள் பகிர்ந்துவருவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது அவரது ட்வீட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக அவர் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அடுத்த அறிவிப்பு வரும் வரை யாரும் தன ட்வீட்டர் கணக்கில் நடப்பதை கவனிக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு காரணம் காமெடியன் கருணாகரன் தான் என நடிகர் சித்தார்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.