மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. அவரா இது!! சமத்தாக இருக்கும் இந்த குட்டி பையன் எந்த பிரபல நடிகர்னு பார்த்தீங்களா.!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வரும் பல பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். அவ்வாறு தற்போது பரவி வரும் இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் வேறு யாருமல்ல, தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஜீவாதான்.
பிரபல முன்னணி தயாரிப்பாளரின் மகனான ஜீவா, ஆசை ஆசையாய் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தித்திக்குதே, டிஷ்யூம், ராம், ஈ, கோ, நண்பன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தனக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
நடிகர் ஜீவா தற்போது யாத்ரா 2 படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பு மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி யாத்ரா திரைப்படம் எடுக்கப்பட்டது. இதில் அவரது கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். தொடர்ந்து ஜீவா மேதாவி என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.