மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. நடிகர் ஜீவாவிற்கு இவ்வளவு பெரிய மகனா!! முதன்முறையாக வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் ஆசை ஆசையாய் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஜீவா. இப்படத்தை அவரது தந்தை ஆர்பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜீவா பல வெற்றித் திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
ஆனால் சமீப காலமாக ஜீவா நடிப்பில் வெளியாகும் படங்கள் சொல்லிகொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. அவர் கைவசம் தற்போது கோல்மால், வரலாறு முக்கியம், மேதாவி உள்ளிட்ட படங்கள் உள்ளன. நடிகை ஜீவா சுப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஸ்பர்ஷா செளத்ரி என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அதில் நடிகர் ஜீவா அவரின் மனைவி மற்றும் மகனுடன் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் ஜீவாவிற்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.