மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட!! நடிகர் ஜீவாவின் மனைவியா இது?? ஆளே மாறிபோய் தற்போது பார்க்க எப்படி உள்ளார் பாருங்க..!
தமிழ் சினிமாவில் தனது தந்தை ஆர்பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆசை ஆசையாய் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஜீவா. அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர். மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
ஆனால் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் எந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.
இதனிடையே பிரபல கிரிக்கெட் வீரர் கேப்டன் கபில் தேவ்வின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து வெளியான 83 திரைப்படத்தில் ஜீவா ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஜீவா சுப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். சமீபத்தில் காதலர் தினத்தை கொண்டாடிய நடிகர் ஜீவா தனது மனைவியுடன் உள்ள அழகிய புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் அட நடிகர் ஜீவாவின் மனைவியா இது ஆளே மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.