மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த அப்பாவி சிறுவன்.. அந்த துறுதுறு நடிகரா.?! நம்பவே முடியலையே.!
தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்தாலும் கூட முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் ஜீவா. கடந்த 2003இல் வெளியாகிய ஆசை ஆசையாய் எனும் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஜீவா அறிமுகமானார்.
அதன் பின் அவர் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவு அந்தப் படங்கள் வெற்றியை பெறவில்லை. அவரது நடிப்பில் வெளியான கற்றது தமிழ் மற்றும் ராம் போன்ற வினோதமான திரைப்படங்களால் அவருக்கு சிறந்த நடிகர் எனும் பெயர் கிடைத்தது.
கடந்த வருடத்தில் ஜீவா நடிப்பில் வரலாறு முக்கியம் மற்றும் காபி வித் காதல் போன்ற திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் இவை எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெறவில்லை. தற்போது நடிகர் ஜீவா பா. விஜய் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகி நடித்து வருகின்றார்.
சமூக வலைதளங்களில் பிரபல நடிகர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், நடிகைகள் உள்ளிட்டோரின் அரிய புகைப்படங்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். அந்த வகையில் நடிகர் ஜீவாவின் ஒரு சிறு வயது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றது.