திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கற்றது தமிழ் படத்தால் நஷ்டமானாலும், அந்த விஷயம் திருப்தி தந்தது - மனம் திறந்த நடிகர் கருணாஸ்.!
கடந்த 2007ம் ஆண்டு அறிமுக இயக்குனர் ராம் இயக்கத்தில், நடிகர் ஜீவா, அறிமுக நடிகை அஞ்சலி, கருணாஸ், அழகம் பெருமாள், மாரி செல்வராஜ் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் கற்றது தமிழ். எதிர்பார்த்த வணிக வெற்றியை பெற்றிடாத திரைப்படம், சில காலத்திற்கு பின் மக்களால் பெருவாரியாக பாராட்டப்பட்டது.
காலம்கடந்து வென்ற கற்றது தமிழ்:
குற்றம், பின்னணியை மையக்கருவாக கொண்டு வெளியான இப்படம், காலம்கடந்த பின்னர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று வரை புகழப்படுகிறது. யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். நடிகை அஞ்சலி இப்படத்தில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.
இதையும் படிங்க: சசிகுமாரின் கருடன் பட டிரைலர் இன்று வெளியீடு; படக்குழு அறிவிப்பு.!
விருதுகளை குவித்த படம்
அதேபோல, இயக்கம், எழுத்து, ஒளிப்பதிவு, பாடல், பாடகர் என பலருக்கு விஜய் விருதுகள் குவிந்தன. இந்நிலையில், இப்படத்தை விநியோகம் செய்த தனக்கு ரூ.2 கோடி நஷ்டம் எனினும், தமிழ் திரையுலகில் சிறந்த நடிகை மற்றும் இயக்குனரை அறிமுகம் செய்ததில் ஆத்ம திருப்தி என கருணாஸ் கூறியுள்ளார்.
நஷ்டத்தாலும் மனத்திருப்தி
நடிகர் கருணாஸ் இதுகுறித்து கூறுகையில், "கற்றது தமிழ் என்ற படத்தை நான் வாங்கி தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டு இருந்தேன். அந்த காலகட்டத்திலேயே எனக்கு ரூ.2 கோடியே 30 இலட்சம் நஷ்டம் ஆனது. நல்ல இயக்குனர், சிறந்த நடிகையை நான் அறிமுகம் செய்துள்ளேன் என்ற விஷயத்தில் பெருமைகொள்கிறேன்" என கூறினார். .
இதையும் படிங்க: விஜய் ஆண்டனி மகளின் இறப்புக்கு காரணம் இதுதானாம்; உண்மையை போட்டுடைத்த பிரபல பின்னணி பாடகி.!